» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு கரோனா தொற்று : பாதிப்பு 1.30 லட்சத்தைத் தாண்டியது

வெள்ளி 10, ஜூலை 2020 7:51:56 PM (IST)

தமிழகத்தில் இன்றுபுதிதாக 3,680 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் புதிதாக 3,680 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,30,261 ஆக உயர்ந்துள்ளது. இன்றிய பாதிப்பில், தமிழகத்தில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3,636. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 44 பேர். சென்னையில் இன்று 1,205 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 74,969 ஆக அதிகரித்துள்ளது.இன்று மட்டும் 4,163 பேர் உள்பட இதுவரை மொத்தம் 82,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 37,309 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 15,29,092 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory