» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் : அரசு உத்தரவு

வெள்ளி 10, ஜூலை 2020 6:31:24 PM (IST)

தமிழகத்தில் 51 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து தமிழகஅரசு வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,  சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் இருந்த அரவிந்த் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி எஸ்.பி.யாக இருந்த ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அடையாறு துணை ஆணையராக விக்ரமன் நியமிக்கப்பட்டுள்ளார். தி.நகர் டிசியாக ஹரிகிரன்பிரசாத், பூக்கடை டிசியாக கார்த்திக் ஐபிஎஸ், கரூர் எஸ்.பியாக பகலவன் , திண்டுக்கல் புதிய எஸ்.பி ராகவலி பிரியா , கன்னியாகுமரி புதிய எஸ்.பி.யாக பத்ரி நாராயணன், ஈரோடு எஸ்.பியாக இருந்த சக்தி கணேசன் நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாகவும், நாமக்கல் எஸ்.பியாக இருந்த அருளரசு கோவை எஸ்.பி.யாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்ட புதிய எஸ்பி.யாக மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை எஸ்.பி.யாக சுஜித்குமார், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக பாலாஜி சரவணன், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பியாக சண்முகபிரியா, தஞ்சை மாவட்ட எஸ்.பியாகதேஷ்முக் சேகர் ஐபிஎஸ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory