» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜூலை மாத ரேஷன் பொருட்கள் இலவசம்: நவம்பர் வரை அரசி இலவசமாக வழங்கப்படும்!!

திங்கள் 6, ஜூலை 2020 4:36:12 PM (IST)

தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: கரோனா வைரஸ் தொற்று காரணமாக 31.07.2020 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால்,  குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே இவ்வாண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் கூடுதல் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலையில்லாமல் வழங்கபபட்டதைப் போலவே, இம்மாதமும் (ஜூலை 2020) குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையின்றி துவரம்பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆணையிடுவதற்கு முன்பு, அதாவது 1.07.2020 முதல் 03.07.2020 வரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களான துவரம்பரும்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை நியாய விலைக் கடைகளில் அதற்கான விலை கொடுத்து பெற்றுனர். அவ்வாறு பெற்றுக்கொண்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, அந்த தொகையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் துவரம்பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் விலையில் ஈடுசெய்து கொள்ளப்படும். இக்குடும்ப அட்டைதாரர்களுக்கு செல்பேசியில் இதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். 

மேலும், இதற்குரிய பதிவுகள் விற்பனை முனைய இயந்திரத்தில் மேற்கொள்ளப்படும். மேற்கண்ட குடும்ப அட்டைதாரர்கள், இம்மாதத்திற்கு தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கூடுதல் அரிசியை நியாயவிலைக் கடைகளில் மீண்டும் சென்று இம்மாதமே பெற்றுக் கொள்ளலாம். அதேபோல், நவம்பர் மாதம் வரை, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக மத்திய அரசு வழங்குவதை கருத்தில்கொண்டு, அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின் படி நவம்பர் 2020 வரை விலையின்றி அரிசி வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory