» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாத்தான்குளம் வழக்கில் தனி விசாரணை அமைப்பு கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திங்கள் 6, ஜூலை 2020 3:34:51 PM (IST)சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல்துறை அல்லாத தனியொரு விசாரணை அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தக் கோரி, சென்னை உயர்நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவரையும் சித்ரவதை செய்து அடித்து கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது வருகிறது. இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி காவல்துறையினர் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.

பிரகாஷ் சிங் வழக்கில், காவல் நிலைய மரணம் தொடர்புடைய வழக்கை காவல்துறையே விசாரிக்கக் கூடாது என்ற, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தவறு செய்யும் காவலர்களை விசாரிக்க தனி அமைப்பை உருவாக்க வேண்டும். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும். தவறான மருத்துவ அறிக்கை அளித்த மருத்துவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றம் ஆவின் நுழைவு வாயில் அருகே, வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக கன்டண முழக்கங்ளை எழுப்பினர்.  

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க மாநில செயலாளர் பாரதி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் தலைமையில், வழக்கறிஞர்கள் பார்வேந்தன், ஆர்.சுதா உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory