» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கரோனா தொற்று உறுதி

சனி 4, ஜூலை 2020 3:31:58 PM (IST)

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் செல்லூர் ராஜூ. இவரது மனைவி ஜெயந்தி. மதுரையில் வேகமாக பரவி வரும் கரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சரின் மனைவி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கரோனா இல்லை என பரிசோதனையில் உறுதியானது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory