» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு இரவு நேர விமான சேவை : பயணிகள் மகிழ்ச்சி!

வெள்ளி 3, ஜூலை 2020 8:27:09 PM (IST)தூத்துக்குடி விமான நிலையத்தில் சென்னைக்கு இரவு நேர சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.

தூத்துக்குடி விமான நிலையத்தில் பகல் நேரம் மட்டுமே விமான சேவை நடைபெற்று வந்தது. இதுவரை விமான நிலையத்தில் சூரிய உதயத்துக்கு பிறகும், சூரியன் மறைவதற்கு முன்பு மட்டுமே விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது, இரவு நேர விமான சேவை அளிக்கும் வகையில் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. 

இதற்காக விமான நிலைய ஓடுபாதை நீளத்தை அதிகரித்தல் உள்ளிட்ட 8 பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்தது. ஓடுதள பாதையில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, ஓடுதளத்தில் இருந்து 56 கிலோ மீட்டர் சுற்றளவில் அதிக உயரம் கொண்ட 5 செல்போன் கோபுரங்களின் உயரம் குறைக்கப்பட்டது. உயரமான கட்டிடங்களில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டது. இதனால் தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்குவதற்கான அனுமதியை மத்திய விமான நிலைய ஆணையம் வழங்கி உள்ளது.

இந்நிலையில், இன்று மதியம் 2.50 மணியளவில் சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வரவேண்டிய இன்டிகோ விமானம் கடும் சூறாவளி காற்றினால் தூத்துக்குடியில் தரை இறங்க முடியாமல் திருச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், மாலை 6.20 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர், 7.00 மணிக்கு சென்னைக்கு அதே விமானம் தாமதமாக 4மணி நேர தாமத்த்திற்கு பின் இரவு நேர விமானமாக புறப்பட்டுச் சென்றது. இதில், சென்னைக்கு மொத்தம் 31 பயணிகள் சென்றனர். விமான நிலைய இயக்குநர்என்.சுப்பிரமணியன், மேலாளர் ஜெயராமன், ஆகியோர் விமானத்தை வழியனுப்பி வைத்தனர். மக்கள் கருத்து

A. Joel TUTICORIN.Jul 4, 2020 - 05:32:14 PM | Posted IP 108.1*****

Welcome night flights service.

SathishJul 3, 2020 - 09:57:01 PM | Posted IP 108.1*****

Great news. Welcoming night services to Tuticorin

K.ganeshanJul 3, 2020 - 09:45:51 PM | Posted IP 162.1*****

We welcome night flight service.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory