» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொறுப்பை தட்டி கழிக்காமல் நீதியைக் காத்திடுங்கள் : தமிழக முதல்வருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

திங்கள் 29, ஜூன் 2020 5:22:12 PM (IST)

சாத்தான்குளம் வழக்கை மக்கள் மறந்துவிடுவார்கள் என காத்திராமல் நீதியை காக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கமல் ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது கொள்கை முடிவு என்பதால், நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி உள்ளது. எனவே, இந்த வழக்கு விரைவில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படலாம் என தெரிகிறது.

ஆனால், அரசின் இந்த முடிவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு: சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! குற்றவாளிகள் மேல் ஐபிசி 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள். 

சிபிஐ விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி. இவ்வாறு கமல் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து

உண்மJul 1, 2020 - 10:39:55 AM | Posted IP 173.2*****

வாயால் சுட்ட வடை வீரன்

indianJun 30, 2020 - 10:04:11 AM | Posted IP 162.1*****

yokiyar vanthu vittar

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory