» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தலையில் தேங்காய் உடைக்கும் சடங்குக்கு தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஞாயிறு 31, மே 2020 3:31:55 PM (IST)

தலையில் தேங்காய் உடைக்கும் சடங்குக்கு தடை விதிக்க முடியாது என  உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தில் மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி 18-ம் தேதி நடைபெறும் ஆடித் திருவிழாவில் பக்தர்களின் தலையில் கோயில் பூசாரி தேங்காய் உடைக்கும் சடங்கு நடைபெறும். இந்த நிகழ்வுக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு : பக்தர்கள் விரும்பித்தான் இந்த நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். 

எந்தவொரு மத நம்பிக்கையிலும், வழிபாட்டு முறைகளிலும் நீதிமன்றம் தலையிட்டு தொந்தரவு ஏற்படுத்த முடியாது. மத உணர்வுகளை புண்படுத்துவது தண்டிக்கக்கூடிய குற்றமாகும். எனவே, மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கரூர் - திருச்சி செல்லும் சாலையில், கரூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் இயற்கை அழகுடன் பசுமை நிறைந்த வயல்வெளிகள் மத்தியில் அமைந்துள்ளது மேட்டு மகாதானபுரம் அருள்மிகு மகாலட்சுமி அம்மன் கோயில்.


மக்கள் கருத்து

ஆமாம்மே 31, 2020 - 04:04:45 PM | Posted IP 162.1*****

தலையில் அடிபட்டவனுக்கு தான் புத்தி வரும் இது மூடநம்பிக்கை என்று ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory