» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா வைரஸ் ரத்த பரிசோதனை கட்டணத்தை குறைக்க தமிழக அரசு உத்தரவு

ஞாயிறு 31, மே 2020 3:27:59 PM (IST)

கரோனா வைரஸ் ரத்த பரிசோதனை கட்டணத்தை குறைக்க வேண்டும் என  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா வைரஸ் ரத்த டெஸ்டுக்கு தற்பொழுது சென்னையில் உள்ள ஆய்வகங்கள் ரூ 4500 வசூலித்து வருகின்றனர் இதனை ரூபாய் 3000 ஆக குறைக்கும்படி தமிழக சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வலியுறுத்தினார். ஆய்வகங்கள் நோயாளியின் வீட்டுக்குச் சென்று ரத்தம் சேகரித்து வந்து சோதனை செய்து முடிவை அனுப்பினால் அதற்காக கூடுதலாக 500 ரூபாய் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். வரும் காலத்தில் கரோனா வைரஸ் இரத்த சோதனைகள் பெரும் எண்ணிக்கையில் செய்யவேண்டியிருக்கும். 

அதனால் கட்டணத்தை 3000 ஆக குறைக்கும்படி அரசு கோரியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை முறைப்படி வெளியிடப்படும் என்றும் சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழகத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 21 ஆயிரத்து தாண்டியுள்ள நிலையில் கரோனா நோயாளிகளின் மருத்துவ செலவை கட்டுப்படுத்த தமிழ்நாடுஅரசு திட்டமிட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படும் என தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory