» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விமானம், ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்களை இயக்க அனுமதி தமிழக அரசு அறிவிப்பு

செவ்வாய் 26, மே 2020 11:51:15 AM (IST)

விமானம், ரயில் நிலையங்களுக்கு பயணிகளை அழைத்துவர, ஏற்றிச் செல்ல டாக்சி, ஆட்டோக்கள் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்த 23-ம் தேதியில் இருந்து சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்கள் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில் இயக்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். தற்போது விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் படிப்படியாக செயல்பாட்டை தொடங்கியுள்ளன.
 
இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா இயக்கம் தொடர்பான அரசாணையில் மாற்றம் செய்வதற்கான முன்மொழிவை அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சில அம்சங்களை சேர்த்து அரசாணை திருத்தப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள், ரயில்வே நிலையங்களுக்கு பயணிகளை அழைத்து வருதல் மற்றும் ஏற்றிச் செல்லுதலுக்கு டாக்சி, ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாவை அனுமதிக்கும் கூடுதல் அம்சமும் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory