» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாளொன்றுக்கு 25 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி- தமிழக அரசு திடீர் கட்டுப்பாடு

செவ்வாய் 26, மே 2020 11:14:03 AM (IST)

சென்னை விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு வரும் உள்ளூர் விமானங்களின் எண்ணிக்கை 25 என்ற கட்டுப்பாடுகளுடன் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய விமான போக்குவரத்துத் துறை செயலாளர் பிரதீப்சிங் கரோலாவுக்கு தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தொடங்கியுள்ள நிலையில், இங்கு நிலவும் சூழ்நிலைப்படி சில கட்டுப்பாடுகளுடன் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு வரும் உள்ளூர் விமானங்களின் எண்ணிக்கை 25 மட்டுமே என்று கட்டுப்படுத்தப்படுகிறது. கோவை, திருச்சி, மதுரைக்கு விமானங்களை இயக்கலாம். 

அதிக தொற்று நிகழ்வை முன்னிட்டு குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் விமானங்களை அனுமதிப்பதில் மிகக்குறைவான வாய்ப்பே உள்ளது. தமிழகத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கையில் எந்த நிபந்தனைகளும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory