» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளை இயக்குவதில் புதிய தளர்வுக்கான உத்தரவு - அரசாணை வெளியீடு

செவ்வாய் 26, மே 2020 10:21:42 AM (IST)

தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளை இயக்குவதில் புதிய உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியீட்ப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: மே 17-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பல்வேறு தளர்வுக்கான உத்தரவுகளையும், திருத்தப்பட்ட உத்தரவுகளையும் அரசு பிறப்பித்து வருகிறது. இந்த நிலையில் 24-ந் தேதியன்று தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. 

அதன் அடிப்படையிலும், அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் முன்மொழிந்த கருத்தின் அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட அரசாணையில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர தமிழகத்தின் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய மற்ற பகுதியில், 100 தொழிலாளர்களுக்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட தொழிற்சாலைகள் 100 சதவீதம் தொழிலாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. 100 எண்ணிக்கைக்கு மேல் தொழிலாளர்களை கொண்ட தொழிற்சாலைகள், 50 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 100 தொழிலாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory