» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கேரளத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியுள்ளார்: பினராயி விஜயனுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து

ஞாயிறு 24, மே 2020 1:57:36 PM (IST)

கேரளத்தை முன்னோடி  மாநிலமாக மாற்றியுள்ளார் என்று முதல்வர் பினராயி விஜயனுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலை கேரள மாநிலம் கையாண்ட விதம் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். மேலும், கேரள முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் பல்வேறு முன்னணி நாளிதழ்கள் பாராட்டு தெரிவித்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. இதனிடையே இன்று (மே 24) கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனால் சமூக வலைதளத்தில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பினராயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: "அப்போது, ரத்தம் தோய்ந்த ஒரு சட்டையுடன் பேசியதன் மூலம் அவர் ஒரு புயலை உருவாக்கினார். இப்போது, தனது மாநிலத்தை நாட்டிலேயே முன்னோடியாக மாற்றியுள்ளார். கேரள முதல்வர் நம்முடனான பிணைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, நம்மை சகோதரர்களாக விளித்து, எல்லைகளைத் திறந்துள்ளார். பினராயி விஜயன் தோழருக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்". இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

உண்மமே 26, 2020 - 09:36:06 AM | Posted IP 162.1*****

உலக மஹா நடிகன் , சினிமாவில் மட்டுமல்ல அரசியலில் கூட, கூத்தாடிகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் முட்டா கூட்டம்..

truthமே 25, 2020 - 03:43:57 AM | Posted IP 162.1*****

Nallavan yengu irunthalum alagu than. Nammakku Adimai Edapadi than alagu.

Indianமே 24, 2020 - 07:14:33 PM | Posted IP 162.1*****

உனக்கு அடுத்தவன் பொண்டாட்டி எப்பொழுதும் அழகுதான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory