» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆன்மிக இளைஞர் அணி சார்பில் 100 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

ஞாயிறு 24, மே 2020 11:09:24 AM (IST)மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணி சார்பில் 100க்கும் மேற்பட்ட‌ ஏழை, எளிய‌ மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. 

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலங்களில் வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் பசியை போக்க, மேல்மருவத்தூர்  ஆதிபராசக்தி சித்தர்பீடம் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அருள்ஆசியுடன் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணி சார்பில் 6வது கட்டமாக தூத்துக்குடியை சேர்ந்த ஆட்டோர் ஓட்டுநர்கள், வறுமையில் வாடும் மக்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மசலாப்பொருட்கள் மற்றும் மாஸ்க் உள்ளிட்ட‌ நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. 

தூத்துக்குடி சிதம்பரநகர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் வைத்து நடபெற்ற நிகழ்ச்சியில் மன்ற தலைவர் மணி, சக்திமுருகன், செல்லத்துரை, பொன்.காசிராஜன், கணேசன், அருண், முரளி, கண்ணன், தாமஸ் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory