» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓமனில் இறந்த தமிழர் உடல் சொந்த ஊர் வந்தது : வைகோ எம்பி., ஏற்பாடு

வியாழன் 21, மே 2020 6:50:14 PM (IST)

ஓமனில் இறந்த தமிழர் இளங்கோவன் உடல் வைகோ எம்பி முயற்சியால் திருவேங்கடம் வந்தது

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், குளக்கட்டாகுறிச்சி கிராமத்தினை சேர்ந்த சாமுவேல் இளங்கோவன் கடந்த 11 மே ஆம் தேதி ஒமன் நாடு சலாலாவில் உடல் நல குறைவால் மரணமடைந்தார்.இவரது உடலை கொண்டு வர உதவுமாறு, இவரது மருமகன் மணிகண்டன் தென்காசி மாவட்ட மதிமுக செயலாளர்  வழக்கறிஞர் இராசேந்திரன் மூலம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பியை தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தார்.அந்த தகவலை கேட்டறிந்த  வைகோ எம்.பி. உடனடியாக இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கு அவசர மின் அஞ்சல் கடிதம் அனுப்பி, உடலை கொண்டு வர உதவுமாறு வேண்டினார்.ஓமனில் உள்ள மதிமுக நிர்வாகிகளையும்  தொடர்பு கொண்டு, தக்க ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் இறந்துவிட்ட சாமுவேல் இளங்கோவன் குடும்பத்தினருடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து வைகோ மேற்கொண்ட  துரித முயற்சியின் விளைவாக, இளங்கோவன் உடல்  நேற்று  ஒமான் சலாலாவிலிருந்து, கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தடைந்தது.அதன்பின் அவரது உறவினர்கள் இளங்கோவனின் உடலைப் பெற்று கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான திருவேங்கடம் அருகே உள்ள குளக்கட்டாக்குறிச்சிக்கு  கொண்டு வந்தனர்.

குளக்கட்டா குறிச்சிமில்  இளங்கோவன் உடலை பார்த்து  மனைவி, மகள்கள் மற்றும்  உறவினர்களும் கதறி அழுதனர். தென்காசி மாவட்ட மதிமுக செயலாளர்  தி.மு.இராசேந்திரன் மலர்வளையம் வைத்து  இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது குருவிகுளம் ஒன்றிய முன்னாள் மதிமுக சேர்மன்
விசுவாமித்திரன்,குருவிகுளம் தெற்கு ஒன்றிய மதிமுக செயலாளர் இராசாராம் பாண்டியன், மதிமுக ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் இராஜகோபால், மதிமுக கிளைச் செயலாளர் ராஜ் உட்பட பங்கேற்றனர்.

குளக்கட்டாக்குறிச்சியில் இளங்கோவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அவரது உறவினர்கள் மற்றும்  ஊர் பொதுமக்கள்  இளங்கோவனின் உடலை ஓமானில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர பெரும் முயற்சிகள் மேற்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பிக்கு நன்றி தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

Ashokமே 21, 2020 - 11:31:21 PM | Posted IP 108.1*****

நல்ல முயற்சி, நன்றி திரு வைகோ அவர்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory