» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொரோனா சமூக பரவல் தொடங்கியதா ? தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மறுப்பு

வியாழன் 21, மே 2020 12:58:46 PM (IST)தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற பங்குதந்தை  ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா சமூக பரவல் நிலையை அடையவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி இன்னாசியார்புரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பங்குதந்தை ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.  அப்பகுதியில் உள்ள பிரதான சாலையான சேதுபாதை ரோடு, அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பிலிருந்து டிஎஸ்எப் மீன் கம்பெனி வரை சாலைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அப்பகுதியில் வேறு நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சுகாதாரத்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் ஓய்வு பெற்ற பங்குதந்தையிடம் விசாரணை நடத்தியதில் அவர் கடந்த 20 நாட்களுக்கு முன் நகரிலுள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று வந்ததாகவும், பல இடங்களில் பிரசங்கங்களுக்கும் சென்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் எங்கெல்லாம் சென்றார், பங்குத்தந்தையை யார், யார் எல்லாம் பார்க்க வந்தனர் என்ற விபரத்தை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் இந்த மாத தொடக்கத்தில் 2 வாரங்களாக கொராேனா இல்லாத நிலை இருந்தது . ஆனால் தற்போது நாளுக்கு நாள் பாதிப்பு உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நமது செய்தியாளர் மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரியிடம் கேட்ட போது, தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பரவல் கிடையாது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்.

கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் சமயத்தில் மக்கள் வெளிய வருவதற்கு நிறைய விதிமுறைகள் இருந்தது. ஆனால் தற்போது பாதிப்பு அதிகமாக இருக்கும் போது மக்கள் சாதாரணமாக வெளியே சுற்றுகிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு, என கவனமாக இருப்பது நம் கையில் தான் உள்ளது.


மக்கள் கருத்து

R. Rajமே 21, 2020 - 01:55:50 PM | Posted IP 162.1*****

திரேஸ்புரம் மீன் சந்தை, ஹார்பர் பீச் மீன் சந்தை, இனிகோ நகர் மீன் சந்தை போன்ற இடத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எவ்வித பாதுகாப்பு உபகரணம் மற்றும் 1மீட்டர் இடைவெளி இல்லாமல் இருப்பதால் கொரானா குடியிருக்க வாய்ப்பு உள்ளது. கலெக்ட்ர் சார் நடவடிக்கை எடுங்க.

Tuticorianமே 21, 2020 - 01:49:58 PM | Posted IP 173.2*****

necessary precautionary steps should be taken before the situation worsens.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory