» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் தனியார் மருத்துவமனை : தூத்துக்குடியில் பரபரப்பு!

செவ்வாய் 7, ஏப்ரல் 2020 8:34:34 PM (IST)

தூத்துக்குடி தனியார் மருத்துவமனை ஊழியர் உட்பட‌  3பேர் அரசு மருத்துவனை கரோனா சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி தனியார் மருத்துவமனை கரோனா பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது. அங்கு வேலை பார்த்த லேப் டெக்னீசியன் ஒருவருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்ததும் 3பேரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டுக்கு மற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் சிலரை தனிமைப்படுத்தப்பட்டதாக ஏற்பட்ட தகவலை அடுத்து தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 7+ 4+ 3 பேர். கொரானா வைரஸ் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 3பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பாதிப்புகள் இருக்கலாம் என்பதால் அங்குள்ளவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த பிரச்சனையின் காரணமாக தனியார் மருத்துவமனை முழுவதும் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

Mahendran செல்வம்Apr 8, 2020 - 03:33:06 PM | Posted IP 162.1*****

Useles tutyonline .. why hiding name..

ஒருவன்Apr 8, 2020 - 09:40:09 AM | Posted IP 108.1*****

அடேய் டூட்டி ஆன்லைன் ?? எப்போ பார்த்தாலும் தனியார் மருத்துவமனை , தனியார் கல்லூரி , தனியார் பள்ளி ,........ தனியார்.. தனியார் தான் வருது .. உருப்படியா செய்தி போடுங்க ..

M RajasekaranApr 8, 2020 - 09:13:20 AM | Posted IP 173.2*****

This might be happened in lack of PPEs and Trump mentality

NickApr 8, 2020 - 08:28:40 AM | Posted IP 162.1*****

Yes

SeenivasagamApr 8, 2020 - 12:30:56 AM | Posted IP 108.1*****

ஏவிஎம் ஹாஸ்பிடல் THAN

TutyApr 7, 2020 - 10:14:39 PM | Posted IP 108.1*****

AVM Hospital ah?

RamamoorthyApr 7, 2020 - 09:38:28 PM | Posted IP 173.2*****

Hospital name

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory