» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா சிகிச்சை: கோவையில் 10 மாத குழந்தை உள்பட 5 பேர் குணமடைந்தனர்

செவ்வாய் 7, ஏப்ரல் 2020 10:32:44 AM (IST)

தமிழகத்திற்கு நல்ல செய்தியாக கோவையில் சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தை உள்பட 5 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 621 ஆக உயர்ந்து உள்ளது.கரோனா பாதிப்பால் 6 பேர் உயிர் இழந்து உள்ளனர். இந்நிலையில் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். 

மேலும் கரோனா சிகிச்சைக்கு முதலாவதாக அனுமதிக்கப்பட்ட 25 வயது மாணவியும் குணமடைந்து வீடு திரும்பினார் என்று கூறியுள்ளார். மேலும், குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட 5 பேரும் 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார். இதன்முலம் தமிழகத்தில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory