» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி: முதல் அமைச்சர் அறிவிப்பு

புதன் 25, மார்ச் 2020 5:29:00 PM (IST)

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நேற்றிரவு முதல் 21 நாட்கள் வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து புதுச்சேரியில், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி செய்யப்படுவதாக புதுவை கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டது. கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ மாணவியர்களும் தேர்ச்சி பெற்றனர் என அறிவிக்க கோரி பெற்றோர் மற்றும் அரசியல் கட்சியினர் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டு இருந்தது. 

இதுபற்றி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில், கரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ மாணவியர்களும் தேர்ச்சி பெற்றனர் என அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று கடந்த 24ம்தேதி நடந்த 12ம் வகுப்பு பொது தேர்வை எழுத முடியாமல் போன மாணவ மாணவியர்களுக்கு மற்றொரு நாளில் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory