» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக உதயம் ஆகிறது மயிலாடுதுறை: முதல்-அமைச்சர் அறிவிப்பு

புதன் 25, மார்ச் 2020 11:04:22 AM (IST)

தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் பழனிசாமி நேற்று  அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: தமிழ்நாட்டின் 13 முக்கிய அரசு துறைகளின் அலுவலகங்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பழமையான கட்டிடத்தின் பராமரிப்பு செலவு மிக அதிகளவில் ஏற்படுகிறது. எனவே அந்த இடத்தில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும்.

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை மேம்படுத்த உலக தரம் வாய்ந்த உபகரணங்களை கொள்முதல் செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும்.

சாதாரண மக்களும் எளிதாக கையாளும் வகையில் இணையவழியாக நிலம் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் கிடைக்க வகை செய்ய ‘தமிழ் நிலம்’ என்ற ஒரு மென்பொருள் உருவாக்கப்படும். இதில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு நில ஆவணங்களை புதுப்பித்தல், இணையவழியாக சொத்து தொடர்பான வில்லங்க விவரங்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்படும். ரூ.40.96 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நவீன நில அளவை கருவிகளை கொண்டு நில அளவை பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு முதல்-அமைச்சர் அறிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory