» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா வைரஸ் : பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

செவ்வாய் 24, மார்ச் 2020 3:26:37 PM (IST)

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் ஏற்கனவே, 12 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து திரும்பிய 74 வயது முதியவர் மற்றும் 52 வயது பெண், சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பிய 25 வயது பெண் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முறையே சென்னை போரூர், புரசைவாக்கம், கீழ்கட்டளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். தனிமைப்படுத்தப்பட்டுள்ள இவர்கள் மூவரின் உடல்நிலையும் சீராக உள்ளது.’ என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory