» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்கள் அதிகமாக மது குடிப்பதே டாஸ்மாக் வருவாய் உயர்வுக்குக் காரணம் : அமைச்சர் விளக்கம்

செவ்வாய் 18, பிப்ரவரி 2020 5:19:16 PM (IST)

தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருவதற்குக் காரணம் என்ன என்பது குறித்து அமைச்சர் தங்கமணி சட்ட மன்றத்தில் இன்று விளக்கம் அளித்தார்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் அதிகரித்து வருவது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று திமுக கேள்வி எழுப்பியது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் 30,000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பிய திமுக, தமிழ்நாட்டில் அதிமுக  அளித்த வாக்குறுதிப்படி மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்றும் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, "தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் உயர்வதற்குக் காரணம், பொதுமக்கள் மது குடிப்பது அதிகரிப்பதுதான். அதற்கு அரசு என்ன செய்ய முடியும்?" மக்கள் அதிகமாக மதுபானங்களை வாங்கிக் குடிப்பதே டாஸ்மாக் வருவாய் உயர்வுக்குக் காரணம். மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி, அதிமுக ஆட்சி அமைந்ததுமே 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் பேரவையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.


மக்கள் கருத்து

உண்மைFeb 18, 2020 - 08:14:57 PM | Posted IP 173.2*****

முட்டா அமைச்சரும் அவருக்கு ஓட்டு போட்ட முட்டா குடிகார பயலுகளும் ...

மக்கள்Feb 18, 2020 - 07:33:11 PM | Posted IP 173.2*****

பலர் வறுமைநிலையில் இருக்கும் போது இதற்கு மட்டும் காசு இருக்கிறது.

படிப்படியாக மது விலக்குFeb 18, 2020 - 06:33:56 PM | Posted IP 162.1*****

படிப்படியாக --- மொத்தம் எத்தனை படி இருக்கு, நாம தமிழ் நாடு இப்போ எத்தனையாவது படியில இருக்குன்னு கொஞ்சம் விவரமா சொன்னா நல்லா இருக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory