» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு

செவ்வாய் 18, பிப்ரவரி 2020 3:26:38 PM (IST)

தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி  குற்றம்சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ், குடியுரிமைச் திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையின மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து பேசிய  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெறும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது; தமிழக அரசிடம் இல்லை . மத்திய அரசுதான் முடிவெடுக்கும் சூழலில் உள்ளது; மத்திய அரசிடம் திமுக உறுப்பினர்கள் வலியுறுத்துங்கள். குடியுரிமை சட்டத்தால் தமிழ்நாட்டில் பிறந்த எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பில்லை.சிஏஏ சட்டத்தால் யார் பாதிக்கபட்டார்கள் என திமுக விளக்க வேண்டும்.

தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ், பாதிப்பு ஏற்படுவதால் தான் மற்ற மாநிலங்களில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக கூறினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், சிஏஏ விவகாரத்தை சொல்லி சொல்லி மக்களை ஏமாற்றி தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.


மக்கள் கருத்து

vadivelFeb 19, 2020 - 01:06:26 PM | Posted IP 173.2*****

sattam olungu kettu poga muthal Karanam TASMAC.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory