» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் நகரும் ரேசன் கடைகள்: சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவிப்பு

செவ்வாய் 18, பிப்ரவரி 2020 12:47:00 PM (IST)

தமிழகத்தில் குறைந்த ரேசன் கார்டுகள் உள்ள பகுதிகளில் நகரும் (மொபைல்) ரேசன் கடைகள் அமைக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்தார்.

சட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் சவுந்திர பாண்டியன் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகையில், "குறிப்பிட்ட அளவு கார்டு இருந்தால் தான் பகுதி நேர ரேசன் கடைகள் அமைக்கப்படுகின்றன” என்றனர்.அவர்கள் மேலும் கூறுகையில், "குறைந்த எண்ணிக்கை கொண்ட கிராமங்களில் மக்கள் நீண்ட தூரம் சென்று ரேசன் பொருட்கள் வாங்கும் நிலை உள்ளது” என்றனர்.

இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதில் அளித்து கூறியதாவது: எதிர்க்கட்சி எம்.எல். ஏ.க்கள் மட்டுமல்ல ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் பகுதி நேர ரேசன் கடைகள் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர். எனவே குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராம மக்களின் நலன் கருதி பகுதி நேர ரேசன் கடைகள் அமைக்க முடியாத பகுதிகளில், நகரும் (மொபைல்) ரேசன் கடைகள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. முதல்-அமைச்சர் ஆலோசனையின் பேரில் மொபைல் ரேசன் கடைகளை அமல்படுத்த ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் இந்த திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory