» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாகன டயர் முதல் போர் விமான டயர் வரை தமிழகத்தில் தயாரிக்கப்படுகிறது: முதல்வர் பெருமிதம்!!

புதன் 12, பிப்ரவரி 2020 12:40:42 PM (IST)

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சியட் நிறுவனத்தின் புதிய டயா் உற்பத்தி ஆலையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 

தமிழக அரசின் தொழில் துறைக்கும், சியட் நிறுவனத்துக்கும் இடையே கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதியன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மதுரமங்கலத்தில் டயர் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.   அதன் அடிப்படையில் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் புதிய டயர் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், வாகன உற்பத்தியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. இரு சக்கர வாகன டயர் முதல் போர் விமான டயர் வரை தமிழகத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் 40 சதவீத டயர் உற்பத்தி தமிழகத்தில்தான் மேற்கொள்ளப்படுகிறது என்றார். இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்களில் ஒன்றான சியட் நிறுவனம், டயர் மற்றும் டயர் சார்ந்த பொருட்களை தயாரிக்க உள்ளது. புதிய தொழிற்சாலை திறக்கப்படுவதன் மூலமாக, சுமார் ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


மக்கள் கருத்து

rajtutFeb 13, 2020 - 07:04:06 PM | Posted IP 108.1*****

பொதுவா tyre நா எங்களுக்கு புடிக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory