» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்: 10 மாணவ-மாணவிகள் புகைப்படத்தை வெளியிட்டது சிபிசிஐடி!!

புதன் 12, பிப்ரவரி 2020 10:21:40 AM (IST)



நீட் தேர்வு முறைகேடு வழக்கில், ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 10 மாணவ-மாணவிகளின் புகைப்படத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டுள்ளனர்.

நீட் தேர்வில் நடந்த முறைகேடு இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தேனி மருத்துவகல்லூரி மூலம் இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பாக தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளையும், அவர்களது பெற்றோர்கள், இடைத்தரகர்கள் என மொத்தம் 14 பேரை கைது செய்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

ஆள் மாறாட்டம் மூலம் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. இந்தநிலையில் சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகம் சார்பாக நேற்றிரவு ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அந்த செய்திக்குறிப்புடன், நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 2 மாணவிகள், 8 மாணவர்கள் புகைப்படங்களை வெளியிட்டனர். புகைப்படத்தில் உள்ளவர்களின் பெயர் விவரங்களோ, முகவரியோ தெரியவில்லை என்றும், அவர்களை பற்றி தகவல் தெரிந்தவர்கள் சி.பி.சி.ஐ.டி. சென்னை அலுவலகத்துக்கு 9443884395 என்ற செல்போன் எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. de-p-c-cw-c-b-c-id@tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory