» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் பிப். 15 வரை குளிர் கூடுதலாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஞாயிறு 26, ஜனவரி 2020 4:31:51 PM (IST)

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் எனவும், பிப்.15ம் தேதி வரை குளிர் கூடுதலாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் தமிழகத்தில் அக்டோபர் மாதம் 17ம் தேதி தொடங்கி மாநிலம் முழுவதும் பரவலாக மழை பதிவானது. இந்த பருவமழை காலத்தில் சராசரி அளவை காட்டிலும் 2 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் குளிர் கூடுதலாக பதிவாகி வருகிறது. இதனால், மக்கள் அதிகாலை நேரங்களில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். அவர்கள், வெயில் தலையை காட்டிய பிறகே வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். இந்த நிலையில் வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை இந்த குளிர், பனி தொடரும் என்று கூறப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

நேற்று அதிகபட்சமாக மதுரை தெற்கில் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் குறிப்பிடும்படியாக மழை பதிவாகாத நிலையில், அடுத்த சில நாட்களுக்கு இது போன்ற வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:வடகிழக்கு பருவமழை நிறைவடைந்துள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். இதே நிலை ஜனவரி 29ம் தேதி வரை தொடரும். சென்னை, சுற்றுவட்டார பகுதிகளை பொறுத்தவரை வானம் மேகமூட்டமின்றி தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 88 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வரும் பிப்.15ம் தேதி வரை குளிர் கூடுதலாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory