» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பயோ மெட்ரிக் கருவியில் வருகையை பதிவு செய்யாத பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை

சனி 25, ஜனவரி 2020 5:23:16 PM (IST)

பயோ மெட்ரிக் கருவியில் வருகையைப் பதிவு செய்யாத பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் ஆதார் எண்ணுடன் இணைந்த பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு கருவி அமல்படுத்தப்பட்டுள்ளது.  பயோமெட்ரிக் கருவிகள் கல்வித் தகவல் மேலாண்மை (EMIS) இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் வருகைப் பதிவு நேரம், தகவல் என அனைத்தையும் கருவி மூலம் கல்வி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.பயோமெட்ரிக் கருவியில் அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களது வருகையைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பயோமெட்ரிக் கருவியில் வருகையைப் பதிவு செய்யாத பள்ளிகள், கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பயோமெட்ரிக் கருவியில் வருகையை ஏன் பதிவு செய்யவில்லை என்று வரும் ஜனவரி 28-ம் தேதிக்குள் அதற்கான காரணத்தை பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் விளக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.  பயோமெட்ரிக் கருவியில் வருகையைப் பதிவு செய்யாத பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் மீதும், உரிய விளக்கம் அளிக்காத பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் மீதும் இனிமேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory