» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப் 4 முறைகேட்டில் அரசு அதிகாரிகளுக்குத் தொடர்பு: சிபிசிஐடி விசாரணையில் தகவல்!

சனி 25, ஜனவரி 2020 3:32:24 PM (IST)

குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் அரசு அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதி தேர்வு மையங்களில் எழுதித் தேர்வானவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது, இடைத்தரகர்கள் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்டதும், இதில் தாசில்தார்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தநிலையில் வழக்கை கையில் எடுத்துள்ள சிபிசிஐடி தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.

ராமேஸ்வரம் தாசில்தார் பார்த்தசாரதி, கீழக்கரை தாசில்தார் வீரராஜ் இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. குரூப் 4 முறைகேடு தொடர்பாக சென்னையில் 12 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், டிபிஐ அலுவலக உதவியாளர் ரமேஷ், 2017-ல் குரூப்-2(ஏ) தேர்வில் வெற்றிபெற்ற திருக்குமரன், தேர்வாளர் நிதீஷ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்கள் மீது 14 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
 
சிபிசிஐடி தரப்பில், இந்த முறைகேட்டில் இரு தேர்வு மையங்களில் பொறுப்பிலிருந்த சில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இடைத்தரகர்கள் சிலர் தேர்வர்களை அணுகி பணம் பெற்றுக்கொண்டு விடைத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையைத் தவிர்த்து வேறு எந்த மையங்களிலும் முறைகேடு நடைபெறவில்லை. கைதானவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்விவகாரத்தில் முக்கிய பங்காற்றியவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் குறித்துப் பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களும் இனி அரசு தேர்வுகள் எழுத டிஎன்பிஎஸ்சி தடை விதித்தது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் ஒருவர் கூட தப்பிக்க முடியாது என்று தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது,


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory