» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எனக்கு நடந்த கொடுமை யாருக்கும் நேரக் கூடாது : எஸ்ஐ., வில்சனின் மனைவி கண்ணீர்

திங்கள் 13, ஜனவரி 2020 1:45:34 PM (IST)

எனக்கு நடந்த கொடுமை யாருக்கும் நேரக் கூடாது என்று களியக்காவிளையில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு காவல் துணை ஆய்வாளர் வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி கூறியுள்ளார்.

களியக்காவிளை செக்போஸ்டில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்ஐ., வில்சனின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி நிவாரணத் தொகைக்கான காசோலையை அவரது மனைவி ஏஞ்சல் மேரியிடம் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வழங்கி, ஆறுதல் கூறினார்.பின்னர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஏஞ்சல் மேரி, எனக்கு நடந்த கொடுமை இனி யாருக்கும் நேரக் கூடாது என்று கண் கலங்கியபடி கூறினார்.

மேலும், எனது மூத்த மகளின் கல்விக்கு அரசு பொறுப்பேற்றுள்ளது. அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் உறுதி அளித்து உள்ளார். எனது இளைய மகள் ஒரு மாற்றுத்திறனாளி. எனவே மூத்த மகளுக்கு அரசுப் பணி வழங்குவதாக முதல்வர் கூறியிருப்பது ஆறுதலை அளிக்கிறது என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory