» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விரைவில் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் வருவேன்: பொங்கல் விழாவில் விஜயகாந்த் பேச்சு

ஞாயிறு 12, ஜனவரி 2020 6:10:01 PM (IST)தொண்டர்கள் தான் எனது முதல் கடவுள், விரைவில் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் வருவேன் என பொங்கல் விழாவில் விஜயகாந்த் கூறினார்.

தேமுதிக சார்பில்  அம்பத்தூர் பகுதியில் கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில்  பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர்.  பொங்கல் விழாவில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:- தமக்காக பிரார்த்தனை செய்யும் தொண்டர்கள் தான் எனது முதல் கடவுள்.  விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டும் வருவேன். தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என  அவர் கூறினார். 

அதனை தொடர்ந்து  விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், நமது நாடு எந்த நாடாக இருந்தாலும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். அவர்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் தீவிரவாத செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது. அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக அதிக இடங்களை கைப்பற்ற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory