» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

செவ்வாய் 31, டிசம்பர் 2019 4:16:41 PM (IST)

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அர்சு உதவிப்பெறும் பள்ளிகள் அனைத்தும் ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வுக்கு பின்னர், கிறிஸ்துமஸ் விழா மற்றும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு டிசம்பர் 24ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மீண்டும் ஜனவரி 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பள்ளி திறக்கும் தேதியில் பள்ளிக் கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக விடுமுறை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படுவதாகவும், பள்ளிகள் ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை 2-ஆம் தேதி நள்ளிரவையும் தாண்டலாம் என்பதால் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிக்கையில் கூறப்படுகிறது


மக்கள் கருத்து

ஆசீர். விDec 31, 2019 - 04:48:50 PM | Posted IP 108.1*****

சனிக்கிழமை திறந்து என்னையா செய்ய போறீங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory