» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதிய மாவட்டங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 6, டிசம்பர் 2019 11:02:53 AM (IST)

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வாா்டு மறுசீரமைப்புப் பணிகளை முடித்துவிட்டு உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி திமுக சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மறுவரையறை முடியாத 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க முடியுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் எழுப்பியது. 

மேலும், 9 மாவட்டங்களைத் தவிர பிற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை முடிக்கும் வகையில் தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory