» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசி புதிய மாவட்ட துவக்க விழா, முதல்வர் பங்கேற்பு : தென்மண்டல ஐஜி ஆய்வு

செவ்வாய் 19, நவம்பர் 2019 8:23:09 PM (IST)தென்காசி புதிய மாவட்ட துவக்க விழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வதால் விழா நடைபெறும் இடத்தினை தென்மண்டல ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தென்காசி புதிய மாவட்டம் துவக்கவிழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. விழா நடை பெறுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. அதற்காக தென்காசி இசக்கி மஹால் மற்றும் அதன் எதிர்புறம் உள்ள ஜல்லிக்கட்டு மைதானம் மற்றும் தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் ஆகிய மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.

இதில் தென்காசி ஐசிஐ  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் கடந்த காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஆகியோர் கலந்து கொண்ட பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் நடந்த பெரிய மைதானம் எனவே அந்த இடத்தில் தென்காசி முதலமைச்சர் கலந்து கொள்ளும்  விழாவை நடத்தலாம் என்று அதிமுக நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

அதன்படி அந்த இடத்தை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன்,  நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா, அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு அந்த இடத்தைத் தேர்வு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விழா மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்கான பூமி பூஜைகள் நடைபெற்றது.  விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன், நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை  கணேசராஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அந்த இடம் போக்குவரத்துக்கு இடையூறாக அமையும் என்று கருதி தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளும் மாவட்ட துவக்க விழாவினை நடத்த முடிவு  செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் தென் மண்டல காவல்துறை ஐஜி சண்முக ராஜேஸ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஆய்வின் போது நெல்லை சரக காவல்துறை  டிஐஜி பிரவீன்குமார் அபிநபு,  நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுனாசிங் தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன், தென்காசி காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory