» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் பழனிசாமி குறித்த நடிகர் ரஜினிகாந்த் பேச்சு : கமல்ஹாசன் ஆதரவு

செவ்வாய் 19, நவம்பர் 2019 8:03:17 PM (IST)

முதல்வர் பழனிசாமி குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனுக்கு ஒரிசாவிலுள்ள நாட்டின் மிகப்பெரிய திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகமான செஞ்சூரியன் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது .நிகழ்வு முடிந்து சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:திறன் மேம்பாடு என்னும் விஷயத்தைப் பற்றி நான் தொடர்ந்து பேசி வருகிறேன். 

அப்படிப்பட்ட நிலையில் இத்தகைய ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து எனக்கு டாகடர் பட்டம் வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மாநிலத்தின் நலம் கருதி நானும் ரஜினியும் சேர்ந்து செயல்பட வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக செயல்படுவோம். கொள்கை வேறுபாடு பற்றியெல்லாம் அப்போது பேசிக் கொள்ளலாம்.முதல்வர் பழனிசாமி குறித்து ரஜினிகாந்த பேசியது விமர்சனம் இல்லை..அது நிதர்சனம்.இவ்வாறு அவர் பேசினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory