» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எங்கள் மீது வீணாக கல் எறிந்து காயப்பட்டுக் கொள்ளாதீர்கள் : ரஜினிக்கு அமைச்சர் எச்சரிக்கை

செவ்வாய் 19, நவம்பர் 2019 3:36:28 PM (IST)

"எங்கள் மீது வீணாக கல் எறிந்து காயப்பட்டுக் கொள்ளாதீர்கள்" என்று நடிகர் ரஜனிக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இலங்கை தமிழர் விவகாரத்தில் வைகோ உள்ளிட்டோர் இரட்டை வேடம் போடுகின்றனர். இலங்கை தமிழர் நலனை பாதுகாப்பதில் அதிமுக அரசு முனைப்பாக செயல்படும்.  ரஜினி, கமல், விஜய் என யாராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் அரியணை ஏற ஆசை இருக்கும், நடிகர்கள் தங்களது கருத்துக்களை சொல்லலாம். 

சிறப்பாக நடக்கு அரசை விமர்சிக்கக்கூடாது. மக்களுக்கு நல்லது செய்த பின்னர் பதவிக்கு வர வேண்டும். மற்றவர்கள் மீது கல்லெறிந்து பதவிக்கு வரக்கூடாது. தமிழக அரசு மீது கல்லெடுத்து அடிக்க நினைத்தால் அவர்கள் மீது தான் காயம் ஏற்படும். எங்கள் மீது வீணாக கல் எறிந்து காயப்பட்டுக் கொள்ளாதீர்கள். தமிழகத்தில் எந்த அதிசயமும் நடக்கப்போவதில்லை. அதிமுக அரசையும் ஆட்சியையும் விமர்சித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory