» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பட ரிலீசின்போது பரபரப்பாக பேசுவது ரஜினியின் வழக்கம் : அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல்!!

சனி 9, நவம்பர் 2019 5:40:09 PM (IST)

"தனது பட ரிலீசின் போது பரபரப்பாக பரபரப்பாகப் பேசுவது நடிகர் ரஜினியின் வழக்கம்" என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல் செய்துள்ளார்.

மதுரையில் வைகை ஆற்றில் தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது அவர், "ஸ்மார்ட் சிட்டி பணிகளால் மதுரை உயர்தர நகரமாக மாறி வருகிறது. வரும் தைப்பூசத் திருநாளன்று வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் முழுமையாகத் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

ரஜினிகாந்திற்கு இரண்டு படங்கள் வெளியாகவிருக்கிறது. தனது படங்கள் வெளியாவதற்கு முன்பெல்லாம் பரபரப்பாகப் பேசுவது அவரின் வழக்கம். தமிழகத்தில் தலைவருக்கான வெற்றிடம் எல்லாம் நிரப்பப்பட்டுவிட்டது. தலைவருக்கான வெற்றிடத்தை எடப்பாடியார் நிரப்பிவிட்டார். ரஜினியோ தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக கனவுலகில் மிதக்கிறார்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கை, மதசார்பற்ற தன்மையை காக்கும் அரசாக அதிமுக விளங்குகிறது. அதற்கு துணையாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளார். நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் தோழமை கட்சி உதவி இல்லாமல் வெற்றி பெற்றோம். மக்களின் ஆதரவோடும் சிறுபான்மை சமூகத்தினரின் ஆதரவாலும்தான் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றோம்" என்றார்.


மக்கள் கருத்து

மவன்Nov 10, 2019 - 08:12:35 AM | Posted IP 108.1*****

தெர்மோகோல் விஞ்ஞானி உண்மையை சொல்லிட்டார் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory