» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாபர் மசூதி தீர்ப்புக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் : பேராசிரியர் காதர்மொகிதீன்

சனி 9, நவம்பர் 2019 1:51:10 PM (IST)

பாபர் மசூதி தீர்ப்பை அனைவரும் ஏற்று, ஒத்துழைத்து நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாபர் மசூதி  - ராம ஜென்மபூமி இடம் சம்மந்தமான நீண்டநாள் வழக்கிற்கு இன்று (09.11.2019) உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்து விட்டது. உச்சநீதிமன்ற இந்திய அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி  தலைமையில் இடம் பெற்றுள்ள ஐந்து நீதிபதிகளும் ஒரே விதமான தீர்ப்பை அளித்திருக்கிறார்கள்.இந்திய ஜனநாயகத்தில் சட்டப் பிரச்சனைக்கு இறுதி முடிவு அளிக்கும் அதிகாரம் உச்சநீதி மன்றத்திற்கே வழங்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பது இறுதித் தீர்ப்பாக அமைகிறது. 

வழக்கின் தீர்ப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு அம்சத்தையும் பற்றிய வாதப் பிரதிவாதம் இன்றையத் தேவை இல்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதும், அதனை ஏற்பதும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எல்லோரும் உடன்பட்டு ஒத்துழைப்பதும் இன்றைக் காலத்தின் கட்டாயத் தேவை என்றே கருதுகிறோம். இந்திய மக்கள் அனைவரும் இதயப் பூர்வமாக இணைந்து வாழும் சமூக சுமூகத்தை உருவாக்கப் பாடுபடுவதே எல்லோருடைய தேசியக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory