» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதலீட்டாளர்கள் மாநாட்டால் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? மு.க. ஸ்டாலின் கேள்வி

வியாழன் 10, அக்டோபர் 2019 7:48:13 PM (IST)

முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதின் மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என நாங்குநேரியில் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங். வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து இன்று மாலை திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, சென்னையில் பிரமாண்டாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி பல லட்சம் கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக ஆளும் கட்சி கூறுகிறது. முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. 

இதுவரை எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? தமிழகத்தில் தினசரி கொலை, காெள்ளை,செயின்பறிப்பு என ஏராளமான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory