» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாலை விழிப்புணர்வில் ஈடுபட்ட தந்தை, மகள் : திருநெல்வேலி துணை ஆணையர் பாராட்டு

வியாழன் 10, அக்டோபர் 2019 6:36:24 PM (IST)திருநெல்வேலியில் சாலை விழிப்புணர்வில் ஈடுபட்ட தந்தை, மகளை திருநெல்வேலி காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் நேரில் அழைத்து பாராட்டினார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது, நேற்று நெல்லை உழவர் சந்தை அருகே கண்ட ஒரு காட்சி வியப்பில் ஆழ்த்தியது. சாலை போக்குவரத்து விழிப்புணர்வில் தொடர்பாக ஒரு குழந்தையும் அவரது தந்தையும் ஈடுபட்டிருந்தனர் .அவர்கள் குறித்து விசாரிக்கும் போது அவர்கள் நெல்லை மாவட்டம் பத்தமடையை சேர்ந்த சாமுவேல் மற்றும் அவரது மகள் லக்சன்யராஜ் என்றும் தெரிந்தது . மருத்துவ உதவியாளர் படிப்பை முடித்துள்ள சாமுவேல் தனது குழந்தையின் விடுமுறை நாட்களில் இவ்வாறு சாலை போக்குவரத்து மற்றும் தலைக்கவச விழிப்புணர்வு செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்தார் .தந்தை மற்றும் அவரது மகளின் சமூக சேவை எண்ணத்தை பாராட்டும் வகையில் எனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி சிறு வெகுமதியும் , பொன்னாடையும் வழங்கினேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory