» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேனர் விழுந்து சுபஸ்ரீ பலி: ஜெயகோபால் ஜாமீன் மனு மீதான விசாரணை 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

வியாழன் 10, அக்டோபர் 2019 4:17:55 PM (IST)

பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில் ஜெயகோபால் ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சுபஸ்ரீ  ‘பேனர்’ விழுந்து பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அனுமதி இன்றி பேனர் வைத்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால்  மீது மாநகராட்சி உதவி பொறியாளர் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து, பேனர் விவகாரத்தில் கைதான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஜெயகோபாலின் உறவினரான மேகநாதனும் ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து இரண்டு பேரின் ஜாமீன் மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம்  இன்று விசாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் காலஅவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம்,  ஜெயகோபால், மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான வழக்கினை வரும் அக்.15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory