» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த காெலை வழக்கு : இளைஞர் கைது, நெல்லை எஸ்பி பேட்டி

புதன் 9, அக்டோபர் 2019 8:16:40 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் 6 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கொலையில் சம்பந்தப்பட்ட நபர் இன்று கைது செய்யப்பட்டார்.

வட்டாலூர் கிராமத்தில் காற்றாலை நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்த கடையத்தை சேர்ந்த முதியவர் முருகன் (68) வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இதே பகுதியை சேர்ந்த முக்கிய குற்றவாளி சக்திவேல் என்ற ஆனந்த் (32)கைது செய்யப்பட்டார்.இது குறித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி., அருண் சக்திகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: 

கொலையுண்டு இறந்து போன முருகன் என்பவர் காற்றாலையில்  இரவில் செக்யூரிட்டியாக பணிபுரிந்தவர். இவர் கடந்த 13- 08- 2013 அன்று காற்றாலை அறைக்கு முன்பாக கழுத்து வெட்டப்பட்டு கொலையுண்டு இறந்து  நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடந்து வந்தது .

இன்னிலையில் இன்று காலை அடைக்கலபட்டணம் பேருந்துநிலையத்தில் வைத்து பூலாங்குளத்தை சேர்ந்த சக்திவேல் என்ற ஆனந்த் (32) கைது செய்யப்பட்டார். மேலும் இவரது நண்பர் அன்னராஜனுடன் இணைந்து இருவரும் அடிக்கடி காற்றாலை அருகிலுள்ள புளியந்தோப்பில் பெண்களை தவறான நோக்கத்தில் அழைத்துவந்து உல்லாசமாக இருப்பதை வாட்ச்மேன் முருகன் இவர்கள் மீது டார்ச்லைட் ஒளி அடித்து சத்தம்போட்டு கண்டித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் வாட்ச்மேன் முருகன் மீது முன்விரோதம் கொண்டு சம்பவ நாளான  12- 8- 2013 அன்று இரவு 10 மணிக்கு காற்றாலைக்கு அருகில்  மது அருந்திக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த காவலாளி முருகன் அவர்களிடம் சத்தம்போட்டு கண்டித்த போது இருவரும் முன் பகையை மனதில் கொண்டு முருகனை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் கொலை சம்பவத்திற்கு பயன்படுத்திய ஆயுதங்கள்  கைப்பற்றப்பட்டது.இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடித்த காவல்துறை அதிகாரிகளை எஸ்பி., அருண் சக்திகுமார் வெகுமதி வழங்கி பாராட்டினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory