» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

புதன் 11, செப்டம்பர் 2019 5:29:04 PM (IST)

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, காஞ்சீபுரம், திருவள்ளூர் கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 6 சென்டிமீட்டரும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் தலா 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory