» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை : திருநெல்வேலியில் பரபரப்பு

புதன் 14, ஆகஸ்ட் 2019 10:44:08 AM (IST)

நெல்லையில் தனது இரு குழந்தைகளையும் கொலை செய்து தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகில் வசித்து வருபவர் மைக்கேல். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், சக்தி அனுசுயா (5) என்ற மகளும், துரைசிங் (4) என்ற  மகனும் உள்ளனர்.மாரியம்மாளுக்கு மனநிலை சரியில்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்றிரவு மாரியம்மாள் திடீரென்று தனது இரு குழந்தைகளின் முகத்தின் மீது தலையணையால் அமுக்கி கொலை செய்த தாக தெரிகிறது.இதில் சக்தி அனுசுயா சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தார். சிறுவன் துரைசிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையில் இரு குழந்தைகளும் இறந்து விட்டதாக கருதிய மாரியம்மாள் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் போலீஸ் விசாரணையில் மாரியம்மாளுக்கு ஏற்கனவே 3வதாக ஒரு வயதில் அனாலிகா பிரகாஷினி என்ற பெண் குழந்தை இருந்துள்ளது என்பதும் அந்த குழந்தைக்கு எறும்பு பவுடர் கலந்த உணவை ஊட்டியதால் இறந்து போனது என்பதும் தெரிய வந்துள்ளது.மனநலன் பாதித்ததால் இந்த கொலைகளை செய்தாரா அல்லது குடும்பத் தகராறு காரணமாக நடைபெற்றதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory