» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அத்திவரதரை தரிசித்தார் நடிகர் ரஜினிகாந்த்: கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை!

புதன் 14, ஆகஸ்ட் 2019 10:27:14 AM (IST)



நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுடன் நேற்று நள்ளிரவு காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை!அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம்  வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. காஞ்சிபுரம் அத்திவரதர் பெருவிழா வைபவம் நிறைவுபெற இன்னும் 2 நாள்கள் மட்டுமே உள்ளநிலையில், பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அலைமோதுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்த ரஜினியைக் கண்டு, அங்கு கூடியிருந்த மக்கள் கையசைத்து ஆரவாரம் செய்தனர். 

அவரை வரவேற்ற அர்ச்சகர்கள், அத்திவரதரின் சிறப்புகளை விளக்கி கூறி சிறப்பு பூஜைகளை செய்தனர். அத்திவரதரை மனைவி லதாவுடன் தரிசித்தார் ரஜினிகாந்த். கோவில் நிர்வாகம் சார்பில் ரஜினிக்கு பூரண கும்ப மரியாதையும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. அவரது சார்பில் சுவாமிக்கு பட்டாடை அணிவிக்கப்பட்டது. தரிசனம் முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்த் பக்தர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். ரஜினிகாந்த் வருகையையொட்டி நள்ளிரவு நேரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory