» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும் நாட்டுக்கும் என்ன பயன்? முதல்வர் பழனிசாமி விமர்சனம்

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 12:52:48 PM (IST)

"ப.சிதம்பரத்தால் நாட்டுக்கும், தமிழகத்திற்கும் என்ன பலன் கிடைத்தது. அவரால் பூமிக்குதான் பாரம்" என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையை திறந்துவைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:- இறைவன் அருளால் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளவான 120 அடியை எட்டும். நீர்வரத்தை பொறுத்து டெல்டா பாசனத்திற்கு படிப்படியாக நீர்திறப்பு  அதிகரிக்கப்படும். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

காவிரியின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது,  மேலும் 3 தடுப்பணைகள் கட்டப்படும். பொதுப் பணித்துறைக்கு சொந்தமான 14 ஆயிரம் ஏரிகளும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான 39 ஆயிரம் குளம், குட்டைகள் தூர்வாரப்படும். கோதாவரி - காவிரி நதிகள் இணைக்கப்படுவது உறுதி. மத்திய அரசின்  உதவியுடன் டெல்டாவில் உள்ள அனைத்து கால்வாய்களும் கான்கிரீட் கால்வாய்களாக மாற்றப்படும் என கூறினார் 

மத்திய அரசு நாளை தமிழகத்தை யூனியன் பிரதேசமாக ஆக்கினால் அதிமுக கைக்கட்டி தலைவணங்கி நிற்கும் என ப.சிதம்பரம் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ப.சிதம்பரம் எவ்வளவு ஆண்டுகாலம் மத்திய அமைச்சராக இருந்தார்,  நாட்டுக்கும் தமிழகத்திற்கும் அவரால் என்ன பலன் கிடைத்தது. எத்தனை  திட்டங்களை கொண்டு வந்தார் அவரால் பூமிக்குதான் பாரம் என முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார்.


மக்கள் கருத்து

NakkeeranAug 13, 2019 - 09:16:18 PM | Posted IP 173.2*****

"ப.சிதம்பரம் எவ்வளவு ஆண்டுகாலம் மத்திய அமைச்சராக இருந்தார், நாட்டுக்கும் தமிழகத்திற்கும் அவரால் என்ன பலன் கிடைத்தது. எத்தனை திட்டங்களை கொண்டு வந்தார் அவரால் பூமிக்குதான் பாரம் என முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார்.

samiAug 13, 2019 - 07:03:17 PM | Posted IP 162.1*****

முதல்வர் சொல்வது மிகவும் சரி - நாட்டில் மதக்கலவரம் உண்டாக்க முயலும் சிதம்பரம் எனும் இந்த பன்றியின் ஆசை நிறைவேறாது

ராமநாதபூபதிAug 13, 2019 - 02:28:02 PM | Posted IP 108.1*****

இதே கேள்வியை அவரு திருப்பி கேட்டா மூஞ்சியை கொண்டு எங்கே வைப்பேள்????

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory