» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சினிமாவில் நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பற்றி என்ன தெரியும்? தமிழிசை கேள்வி!

திங்கள் 12, ஆகஸ்ட் 2019 3:39:32 PM (IST)

சினிமாவில் நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பிரச்சனை பற்றி என்ன தெரியும்? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். 

ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கும், அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தமிழகத்தில் பலர் கருத்து கூறி வருகிறார்கள். இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனை குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து கூறினார். அதில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றே கருத்து கூறிவிட்டார். என்ன பேசினார் 

அடுத்தவர் வீட்டு பிரச்னையில் மற்றொருவர் தலையிட முடியாது. தலையிட கூடாது. பக்கத்து வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம்; ஆளுமை செலுத்தக் கூடாது. அவர்கள் வாழ்க்கையில் தலையிட கூடாது, என்று பெரியார் பழமொழியை வைத்து விஜய் சேதுபதி பேசினார். . காஷ்மீர் விவகாரம் தற்போது தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், விஜய் சேதுபதியின் கருத்துக்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், காஷ்மீர் பற்றி சிலர் தவறாக கருத்து கூறுகிறார்கள். சினிமாவில் நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பிரச்சனை பற்றி என்ன தெரியும்? காஷ்மீரை பற்றி ஒன்றுமே தெரியாத நபர்கள் எல்லாம் கருத்து கூறுகிறார்கள்.பெரியார் பற்றி எல்லாம் தேவையில்லாமல் எடுத்துக்காட்டு கூறுகிறார்கள். 

அவர்கள் சினிமாவில் மட்டும் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். காஷ்மீரில் இந்தியா செய்த நடவடிக்கையை பல கோடி பேர் வரவேற்று இருக்கிறார்கள். உலக தலைவர்கள் பலர் இந்த நடவடிக்கையை வரவேற்று இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நடிகர்கள் கொஞ்சம் அமைதி காப்பதே நல்லது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். முன்னதாக நேற்று நடிகர் ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்தார்.ரஜினி தனது பேச்சில், காஷ்மீர் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அதை வரவேற்கிறேன். அமித் ஷாவும் மோடியும், கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்றவர்கள், என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

சாமிAug 12, 2019 - 08:20:42 PM | Posted IP 162.1*****

இவளுக்கு என்ன தராதரம் இருக்கிறது. கர்நாடக பிபேஜபீ தலைவர் ஆபத்து என்ற அணுக்கழிவை தமிழக மக்கள் மேல் போட சொன்ன துரோகி தான் இவள்.

samiAug 12, 2019 - 08:01:24 PM | Posted IP 162.1*****

அவரது கருத்தை அவர் சொல்லி இருக்கிறார் - அதற்கு விஜய் சேதுபதியிடம் அனுமதி கேட்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை - அம்மா அவர்களே - இதுபோன்ற நக்சல் பேச்சை எல்லாம் பொருட்படுத்தவேண்டாம் - நாலுபேரிடம் விளம்பரத்திர்காக பேசுகிற பேச்சு - ஒதுக்கித்தள்ளுங்கள்

நிஹாAug 12, 2019 - 06:18:55 PM | Posted IP 173.2*****

ரஜினியும் சினிமா நடிகர்தான். நீங்கள் அவரையும் சேர்த்துதான் சொல்கிறீர்களா?

குமார்Aug 12, 2019 - 04:08:00 PM | Posted IP 108.1*****

மேடம் விஜய் சேதுபதிக்கு எல்லாம் கருத்து சொல்லி உங்கள் தரத்தை குறைத்துக்கொள்ளவேண்டாம்.....தொடர்ந்து படம் தோல்வியடைந்தால் இப்படித்தான் பிதற்றத்தோன்றும்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory