» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுமியை கடத்தி விபசாரம்; 3 பெண்கள் கைது: பலாத்காரம் செய்த 5 பேருக்கு வலைவீச்சு!!

வெள்ளி 12, ஜூலை 2019 10:41:38 AM (IST)வீட்டில் கோபித்துக்கொண்டு வெளியேறிய 16 வயது சிறுமியை கடத்தி, வீட்டில் சிறை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பெண்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். 

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பாட்டி திட்டியதால் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மகளை காணவில்லை என சிறுமியின் தாயார் 7-ந்தேதி புளியந்தோப்பு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். இந்தநிலையில் மாயமான சிறுமி, கடந்த 9-ந்தேதி தானாக வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவர், வீட்டில் இருந்து வெளியேறிய தன்னை, சிலர் கடத்திச்சென்று வீட்டில் சிறை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாகவும், அப்போது தன்னை 5 பேர் கற்பழித்ததாகவும் கூறி அழுதார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுபற்றி புளியந்தோப்பு போலீசில் மீண்டும் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், சிறுமியிடம் விசாரித்தனர். 3-ந்தேதி தனது பாட்டி திட்டியதால் கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமி, வியாசர்பாடி அன்னை சத்யாநகரில் உள்ள ஜபினா(30) என்பவரது வீட்டுக்கு சென்றார். மறுநாள் அவர், அந்த சிறுமியை புளியந்தோப்பு புதிய கார்ப்பரேசன் சந்துவில் உள்ள முபினாபேகம் (37) என்பவரது வீட்டில் விட்டுவிட்டார்.

முபினா பேகம், அந்த சிறுமியை புரசைவாக்கம் முத்து தெருவில் உள்ள நிஷா (36) என்பவரது வீட்டில் ஒப்படைத்து உள்ளார். நிஷா, அந்த சிறுமியை தனது வீட்டில் சிறை வைத்து, விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். அப்போது 5 பேர் சிறுமியை வலுக்கட்டாயமாக கற்பழித்து இருப்பதும் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஜபினா, முபினா பேகம் மற்றும் நிஷா ஆகியோர் பங்குபோட்டு கொண்டதும் தெரிந்தது.

இதையடுத்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா, சிறுமியை கடத்தி சிறை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய ஜபினா, முபினாபேகம், நிஷா 3 பேரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் சிறுமியை கற்பழித்த 5 வாலிபர்கள் யார், யார்? என்பது பற்றி விசாரித்து வருவதாகவும், அவர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

அருண்Jul 12, 2019 - 02:47:50 PM | Posted IP 210.1*****

சென்னை இவ்வாறான ஏமாற்றுபவர்கள் நிறைந்த இடம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory