» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேசவிரோதி என தீர்ப்பளிக்கப்பட்டவர் எம்.பி.யா?: சட்டத்தில் ஓட்டை என எச். ராஜா குற்றச்சாட்டு!

வியாழன் 11, ஜூலை 2019 11:12:38 AM (IST)

தேசவிரோதி என உறுதி செய்யப்பட்ட நபர் மாநிலங்களவை உறுப்பினரா? என்று எச். ராஜா கேள்வியெழுப்பியுள்ளார். 

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் மதிமுக பொதுச் செயலர் வைகோவின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக, வைகோ மீது தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில், அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையில், அவரது வேட்பு மனு ஏற்கப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டது. அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து வேட்பு மனு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தால் தேசவிரோதி என உறுதி செய்யப்பட்ட நபர் மாநிலங்களவை உறுப்பினரா என கேள்வி எழுப்பிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, சட்டத்தில் ஓட்டை இருப்பதாக கூறியுள்ளார். அதுவும் தனது டுவிட்டர் பக்கத்தில் அவரே இதனைப் பதிவு செய்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் எச். ராஜா கூறியிருப்பதாவது, நீதிமன்றத்தால் தேசவிரோதி என உறுதி செய்யப்பட்ட நபர் மாநிலங்களவை உறுப்பினரா? சட்டத்தில் ஓட்டை என்று பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து

இவன்Jul 12, 2019 - 10:53:32 AM | Posted IP 173.2*****

TWITTER வலைத்தளங்கள் எல்லாம் வெளிநாட்டவரருடையாது அதை பயன்படுத்தி மக்களை தோசை விரோதி , தேச விரோதி என்று கூறுவது எவ்வளவு கிறுக்குத்தனம் முட்டாள்தனம் ..

FalconJul 12, 2019 - 10:31:42 AM | Posted IP 173.2*****

உண்மை

FalconJul 12, 2019 - 10:30:20 AM | Posted IP 210.2*****

ராஜா சொன்னது சரிதான்

ஆசீர். விJul 11, 2019 - 11:53:29 AM | Posted IP 162.1*****

இதை ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சொல்வதுதான் முரண்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory