» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாத்திகவாதிகளை ஆத்திகவாதிகளாக மாற்றிய அத்திவரதர்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

புதன் 10, ஜூலை 2019 4:26:34 PM (IST)

நாத்திகவாதிகளை ஆத்திகவாதிகளாக அத்திவரதர் மாற்றியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வீட்டுக்குள் ஆத்திகவாதியாகவும், வெளியில் நாத்திகவாதியாகவும் இருகின்றனர். கடவுள் இன்றி ஒரு செயலும் கிடையாது. திமுகவை சேர்ந்த எம்பிக்கள் உள்பட பலரும் அத்திவரதரை தரிசிக்க இலவச பாஸ் கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

நாத்திகர் என்று சொல்லி சிலர் இரட்டை வேடம் போடுகின்றனர். கடவுள் இல்லை என்று அண்ணாவே கூறவில்லை. 10 சதவிகித இடஒதுக்கீட்டு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மனிதக்கழிவுகளை அகற்றுவதற்காக இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா, அத்திவரதரை தரிசனம் செய்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று அமைச்சர் ஜெயகுமார் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது


மக்கள் கருத்து

சாமிJul 11, 2019 - 11:20:57 AM | Posted IP 108.1*****

அப்டிப்போடு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory